திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 9 நாளை திங்கள் காலை 9:30 மணிக்கு சிறப்பு விழா நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி எழுதிய நூல் வெளியிடப்பட உள்ளது. மேலும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் தின விழாவும் நடத்தப்படுகிறது.
விழாவில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை பேராசிரியர் முனைவர் முருகேஸ்வரி கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments