தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் காலத்திற்கேற்ற வகையில் புதிய யுக்திகளை கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் சேலைகள் மற்றும் இதர ரகங்கள் உற்பத்தி செய்து தனது விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்துவருகிறது.
புதிய வடிவமைப்புகளில் பட்டு சேலைகள், பருத்தி சேலைகள், சுடிதார் ரகங்கள் குர்தீஸ்கள், போர்வைகள், கைலிகள் மற்றும் ரெடிமேட் சர்ட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது 30 சதவீதம் சிறப்புத்தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அதன்படி இந்த ஆண்டும் சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோ.ஆப்டெக்ஸ் நிறுவனம் கனவு நனவு திட்டம் என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் மாதாந்திர சந்தா ரூபாய் 300 முதல் 20000 வரை செலுத்தலாம்.

இதன்படி 10 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு11, 12வது மாத சந்தா தொகையை கோ.ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை வழங்கி வருகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments