திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் தாங்கள் சாகுபடி செய்த தோட்டக்கலைப் பயிர்களை காப்பீடு செய்து இயற்கை இடர்பாடுகளான வறட்சி, வெள்ளம் மற்றும் மகசூல் இழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து காப்பீடு பெறுவதற்கு இத்திட்டம் மிக பயனுள்ளதாகும்.
2025-26-ம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் ராபீ பருவத்தில் மரவள்ளி, வாழை, சிவப்பு மிளகாய் மற்றும் வெங்காய பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். எனவே சிவப்பு மிளகாய்க்கு 31.01.2026-ம், வெங்காய பயிருக்கு 15.02.2026-ம், வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு 28.02.2026-ம் வரையிலும் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் உள்ளதால் பிரீமியம் தொகையாக ஏக்கர் ஒன்றிற்கு வெங்காய பயிருக்கு ரூ.2101.98/-ம், வற்றல் மிளகாய்க்கு ரூ.1242.42/-ம், வாழைக்கு ரூ.3532.10/ம், மரவள்ளி பயிருக்கு ரூ.1662.32/-ம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அல்லது இ-சேவை மையங்களில் செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இப்பயிர்க் காப்பீடு பதிவு செய்திட நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன், பதிவு செய்யும் விவசாயியின் பெயர், முகவரி, நிலபரப்பு, சர்வே எண் மற்றும் உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக அளித்து பதிவு செய்து, உரிய தொகையினை செலுத்தி, இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments