இந்தியாவில் வாக்குத்திருட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்க பணிகள் குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வாக்குதிருட்டு
குறித்து பொதுமக்களிடம் விளக்கி கூறி கையெழுத்து இயக்கத்தை நாடு முழுவதும் நடத்தி வருகிறோம். தமிழகத்தில் ஒரு கோடி பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் கூட்டணி குறித்து யாரும் கருத்து கூற வேண்டாம். திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஏதாவது கருத்து கூறி கூட்டணிக்குள் நெருடல் ஏற்படுத்தி விடக்கூடாது. கூட்டணியில் யார் வருவார்கள். யார் இருப்பார்கள் என்பது குறித்து டெல்லி மேலிடம் பார்த்துக் கொள்ளும். கட்சி தலைமையின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். இப்போது இருக்கும் கூட்டணிக்கு ஏதுவாக பேசி விட்டு போங்க போக வேண்டும்.
மேலும், நாம் பேசுவதை விட்டுவிட்டு செயலில் ஈடுபட வேண்டும்.
சட்டமன்றத் தேர்தலுக்கு குறுகிய காலமே இருக்கும் நிலையில் தமிழக முழுவதும் பூத் கமிட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பூத் கமிட்டி அமைத்து விட்டால் தேர்தலில் 60 சதவீதம் பணிகள் முடிந்த மாதிரி ஆகும். ஒரு கூட்டத்தில் கொடியை காட்டிவிட்டால் கூட்டணி உருவாகி விடுமா? இது சில விஷமிகள் செய்யும் வேலையாகும்.
கரூர் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அது பற்றி மேலும் கருத்து கூற விரும்பவில்லை.
திருமாவளவன் போன்ற அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார். பிறகு திருச்சி அருணாச்சலம் மன்றத்திற்கு வெளியே பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கி, கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments