திருச்சி காந்தி மார்க்கெட்டில் மொத்தம் ஆயிரத்துக்கு மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. இங்கிலீஷ் காய்கறிகள், நாட்டுக் காய்கறிகள் உள்ளிட்டவைகள் சுமார் 50 டன் வருகிறது.இந்நிலையில் இன்று முதல் தமிழக அரசு காலை10 மணிக்கு மார்க்கெட்டில் கடைகள் அனைத்தையுமே மூடிவிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.10 மணி ஆனவுடன் அவசரஅவசரமாக வியாபாரிகள் கடைகளை மூடி தங்களிடமிருந்த காய்கறிகளை பாதுகாக்க முடிந்ததை கடைகள் வைத்து விட்டு மீதமுள்ள காய்கறிகள் கொட்ட வேண்டிய நிலைக்கு தள்ளபட்டுள்ளனர்.
குறிப்பிட்ட நேரத்தில் இந்த காய்கறிகள் அனைத்தையும் அவர்களால் விற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் அனைத்துமே பாதுகாத்து வைக்க முடியாது.
எனவே நாட்டுக் காய்கறிகளான முருங்கைக்காய், அவரைக்காய், புடலங்காய் ,வெண்டைக்காய் உள்ளிட்ட அனைத்தையும் வியாபாரிகள் மார்க்கெட்டில் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். இவை அனைத்தும் 10 டன் வரை நாள் ஒன்றுக்கு வீணாக குப்பைக்கு போகிறது. கால்நடைகள் இந்த காய்கறிகளை உண்ணும் காட்சிகள் வியாபாரிகள் கண் முன்னரே அரங்கேறுகிறது.
வியாபாரிகள் இதனால் மன வேதனையும் அடைந்துள்ளனர். ஒருபுறம் தமிழக அரசை பொறுத்தவரை கோவிட் தொற்று 2ம் அலை பரவலை தடுப்பதற்காக விதிமுறைகளை கடுமையாக்கி உள்ளது . ஊரடங்கால் மறுபுறம் வியாபாரிகளும் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக குறிப்பிடுகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd
Comments