இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் நேற்று சென்னையில் கோவிட் தொற்றால் காலமானார். அவருடைய உடல் இன்று திருச்சி சீராத்தோப்பிலுள்ள இந்து பண்பாட்டுக் கல்லூரி வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று அவருடைய இறுதி சடங்குகள் நடைபெறும் என இந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஹெச். ராஜா திருச்சி சீராத்தோப்பில் ராமகோபாலனுக்கு உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச். ராஜா….. “கொள்கைகளை தாண்டி இறந்தவருக்கு இரங்கல் தெரிவிப்பது மரபு. அதன்படி, ராமகோபாலனுக்கு கி.வீரமணி, ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர். நான் கருணாநிதிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினேன். பாபர் மசூதி இடிப்பு என்ற சதித் திட்டத்தை தீட்டியவர்களின் சதி உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது” என்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய…https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
Comments