திருச்சியில் செப்டம்பர் 15-இல், மறுமலர்ச்சி திமுக அண்ணாவின் 117-ஆவது பிறந்தநாள் விழா மாநாட்டை மிகச்சிறப்புடன் நடத்திட திட்டமிட்டு வருகிறது.
இதனையொட்டி, 25.08.2025 திங்கள்கிழமை, திருச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திருச்சி மண்டலம், மதுரை மண்டலம், தஞ்சை மண்டலம் மற்றும் கடலூர் மண்டலங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள், துணைப் பொதுச்செயலாளர்கள், மாநில அணிகளின் செயலாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
காலை 11 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 3 மணி வரை அனைத்து மாவட்டச் செயலாளர்களும், அணிச்செயலாளர்களும், தங்களது பகுதிகளில் இருந்து ஏராளமான வேன் மற்றும் பஸ்களில் ஆயிரக்கணக்கான கட்சித் தோழர்கள், மகளிர் மற்றும் இளைஞர்கள் – மாணவர்கள் – விவசாயிகள் – வழக்கறிஞர்கள் என அனைத்துத் தரப்பினரையும் அழைத்து வருகின்ற விபரங்களை தரவுகளுடன் தெரிவித்தனர்.
மேலும், அனைத்து நகரம், ஒன்றியங்கள், நெடுஞ்சாலைப் பகுதிகளில் மாநாடு சுவர் விளம்பரங்கள் எழுதிய விபரங்களையும், இன்னும் முழுவீச்சுடன் எழுதும்பணி தொடர்கிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கழகப் பொருளாளர் மு.செந்திலதிபன், துணைப் பொதுச்செயலாளர்கள் டாக்டர் ரொஹையா, ஆடுதுறை இரா.முருகன், மதுரை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன் ஆகியோர் மாநாடு வெற்றியடைவதற்கு உரிய ஆயத்தப் பணிகள் குறித்து பேசினார்கள்.
நிறைவாக நான் பேசும்போது, திருச்சியில் நடைபெற உள்ள அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு வரலாற்றுப் புகழ் வாய்ந்த மாநாடாகும். 2023-இல் மதுரையில் அண்ணன் பூமிநாதன் அவர்கள் முன்னின்று நடத்திய மாநாடு சிறப்பான மாநாடாகும். திருச்சியில் நாம் நடத்தப் போகும் மாநாடு சரித்திர முக்கியத்துவம் பெறும் வகையில் நாம் அனைவரும் இணைந்து களப்பணியாற்றிடுவோம்.
வருகை தந்துள்ள மாவட்டச் செயலாளர்கள், அணிச்செயலாளர்கள் பேசிய கருத்துகள் அனைத்தும் வெளிப்படைத் தன்மையானது. நீங்கள் கூறிய கருத்துகளின் அடிப்படையில் இந்த மாநாட்டிற்கு இலட்சக்கணக்கில் கூட்டம் வரும் என்ற நம்பிக்கையை எனக்குத் தந்துள்ளது.
மாநாட்டிற்கு அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள்.
எண்பது வயது கடந்தும் தமிழ் மக்களுக்காக உழைத்து வருகின்ற இயக்கத் தந்தை தலைவர் வைகோ ஆற்றிய சாதனைகள் குறித்தும், அண்ணாவின் புகழ் சொல்லும் விளம்பரப் பதாகைகள் இந்த மாநாட்டில் சிறப்பு சேர்க்கும்.
மாநாடு பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணிக்கு நிறைவு செய்யும் வகையில் திட்டமிட்டுள்ளோம்.
திருச்சியில் நடைபெறும் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு நிச்சயம் மறுமலர்ச்சி திமுக தோழர்களுக்கு ஒரு புதிய தெம்பை, உற்சாகத்தைத் தரும் என்று பேசினார் துரை வைகோ அவர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments