Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திரள் நிதியிலோ பிச்சை எடுத்ததிலோ வந்த பதவி அல்ல – சீமான் பேச்சிற்கு எஸ்.பி வருண்குமார் பதில்

சமூக வலைதளத்தில் தம்மையும், தமது குடும்பத்தை பற்றியும் கடுமையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டதாக திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார் கடுமையாக குற்றம்சாட்டி இருந்தார். குறிப்பாக நாம் தமிழர் கட்சி மீதும், அதன் நிர்வாகிகள் மீது அவர் புகாரும், கூறி இருந்தார். அதேபோல, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும், வருண் குமார் மீது குற்றச்சாட்டுகளை கூறி இருந்தனர்.

இந்நிலையில், சமூக வலைதளத்தில் இருந்து தானும் தமது மனைவி வந்திதா ஐ.பி.எஸ்., இருவரும் தற்காலிகமாக விலக முடிவு எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார் வருண் குமார்.

இதனை தொடர்ந்து திருவாரூரில் பேட்டி அளித்த சீமான்…. ஏற்கெனவே என் மீது 138 வழக்குகள் உள்ளன. அதை அதிகப்படுத்தி 200 ஆக்கிவிடலாம் என்று திருச்சி எஸ்.பி வருண்குமார் நினைக்கிறார். டபுள் செஞ்சுரி அடித்தார் சீமான் என்று வரலாற்றில் வரவேண்டும் அல்லவா? அவர் ஐபிஎஸ் அதிகாரியாக இயங்க வேண்டும். திமுகவின் ஐடி விங்கில் வேலை செய்யக் கூடாது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அவருடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்-ல்……. பிச்சை எடுப்பது, பெண்களை ஆபாசமாக பேசுவது, நில அபகரிப்பு, ரவுடித்தனம் செய்வதை சிலர் நிறுத்தினால், நான் காக்கி சட்டையை விடுவது பற்றி யோசிக்கிறேன். நான் காக்கி சட்டையில் இருப்பது அவ்வளவு பயமுமோ? திரள் நிதியிலோ பிச்சை எடுத்ததிலோ வந்த பதவி அல்ல.

கடினமாக உழைத்து இரவு பகலாக படித்து ரத்தம் வேர்வை கண்ணீர் சிந்தி, சொந்த உழைப்பில் வாங்கிய வேலைபெற்றோரின் கருணையால், உரப்புலி குலதெய்வத்தின் அருளால் UPSC CSE 2010ல் All India Rank 3 எடுத்ததை நினைவு கூறுகிறேன். என்று பதிவிட்டுள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *