திருச்சி மாவட்டம், துறையூர் அருகே பெருமாள்மலை அடிவாரம் பகுதியில் சுமார் 72 குடும்பங்கள் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் வசித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் பச்சைமலை நீர் பிடிப்பு பகுதியில் இருந்து வந்த மழை நீர் மற்றும் அப்பகுதியில் பெய்த மழை நீர் சூழ்ந்து மக்கள் வீட்டிற்குள் செல்ல முடியாத அளவிற்கு உள்ளது. வீட்டிற்கு செல்வதற்கு சிரமப்படுவதாக கூறி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மாற்று இடம் அமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
அப்பகுதி மக்கள் செவந்தாங் குட்டை ஒன்று அமைந்துள்ளது. மழைக்காலங்களில் இக்குட்டை நிரம்பி இங்கு தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு இதுபோல் இங்குள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்த போது இப்பகுதியை பார்வையிட்ட திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு இப்பகுதியில் உள்ள மக்களுக்கு மாற்று இடம் வழங்கி அதற்கு பட்டா வழங்குவதாக கூறி சென்றதாகவும்,
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதியில் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். போர்க்கால அடிப்படையில் அரசு அதிகாரிகள் வெள்ளநீர் வெளியே செல்ல நடவடிக்கை மேற்கொண்டு தங்களுக்கு பட்டாவுடன் வேறு இடம் அமைத்து தர அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments