மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையான த்ரோபால் போட்டி திருச்சி கி.ஆ.பெ மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இன்று நண்பகல் நடைபெற்றது. கடும் வெயிலில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் உறையூர் பாண்டமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் கிஆபெ மேல்நிலைப்பள்ளி மாணவிகள் விளையாடினர்.
மாணவிகளை உரிய முறையில் போட்டிக்கு தயார்படுத்தாமல் அவர்களை போட்டிக்கு அழைத்து வந்தது ஒருபுறம் இருந்தாலும், இதில் அரசு பள்ளி மாணவிகளை காலில் செருப்பு இன்றி போட்டியில் பங்கேற்க வைத்ததால் மாணவிகள் தகிக்கும் வெயிலில் மிகுந்த சிரமம் அடைந்தனர். இது விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட்டுத்தனமுடைய விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துறையில் இது போன்ற அவலங்கள் இன்னும் தொடரலாம், விளையாட்டுத்துறை அமைச்சரின் ரசிகர் மன்றத்தின் தலைவராக உள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகளின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தவும் அவர்களுக்கு போட்டிகளில் பங்கேற்க ஏதுவாக அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்காமல் அலட்சியமாக இருப்பதும் இது போன்ற விளையாட்டுப் போட்டிகள் எடுத்துக்காட்டாக உள்ளது.
இனியாவது பள்ளிக்கல்வித்துறையும், விளையாட்டு துறையும் செயல்படுமா அல்லது விளையாட்டுத்தனமாகவே இருக்குமா என்பது தெரியவில்லை.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision







Comments