இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தகவல் தொழில்நுட்ப அணியின் பொதுக்குழு திருச்சி ஏ. எம். கே மஹாலில் மாநிலத் தலைவர் எம். எஸ். சல்மான் முஹம்மது தலைமையில் நடைபெற்றது.
இதில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தொடர்ந்து 19.12. 2025 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தமிழ்நாட்டில் 97 லட்சத்து 37 ஆயிரத்து 832 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான செய்தி வெளிவந்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் முஸ்லிம் வாக்காளர்கள் எல்லா மாவட்டங்களிலும் நீக்கப்பட்டுள்ளார்கள்.
இதனால் வாக்குரிமை மட்டுமின்றி ஒன்றிய அரசின் சூழ்ச்சி அரசியலான குடியுரிமையும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
எனவே டிசம்பர் 19 முதல் ஜனவரி 18 வரை நடைபெற உள்ள புதிய வாக்காளர் பதிவு வெளிநாடு வாக்காளர் பதிவு, வாக்காளர் திருத்தம் போன்ற பணிகளில் அதற்குரிய படிவங்களில் மனு செய்து எவருடைய பெயரும் விடுபட்டு விடாமல் முழுமையான கவனத்தை செலுத்த முழு அளவில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது என்று இக்கூட்டம் முடிவு செய்கிறது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம்.காதர் முகைதீன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கி கௌரவித்த முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டம் நெஞ்சம் நிறைந்த நன்றியை உரித்தாக்குகிறது.
தமிழக முஸ்லிம்களின் கோரிக்கையை ஏற்று புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹாஜிகளின் வசதிக்காக சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் ஹஜ் இல்லத்தை ரூபாய் 39.20 கோடியில் தமிழ்நாடு அரசின் சார்பில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்ததற்கும்,
இந்திய அரசியல் நிர்ணய சபையில் தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும் என குரல் கொடுத்த கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் திருநெல்வேலியில் ரூபாய் 110 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசின் சார்பில் மாபெரும் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைப்பதற்கும் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டம் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்து 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காதர் மொய்தீன்…
எஸ் ஐ ஆர் கணக்கெடுப்பில் இறந்தவர்கள் இரட்டை பதிவு உள்ளவர்களை நீக்கியது சரிதான் ஆனால் இடம்பெயர்ந்தவர்கள் நீக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதை ஜனவரி மாதத்திற்குள் தேர்தல் ஆணையம் சரி செய்யும் என நம்புகிறோம்.
திமுக கூட்டணியில்
இஸ்லாமியர்கள் போட்டியிட 16 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என திமுக தலைமையிடம் வலியுறுத்துவோம். அதில் ஐந்து தொகுதிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு கேட்போம்.
16 தொகுதிகள் முஸ்லீம்களுக்கு கொடுங்கள் என கேட்டுள்ளோம்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக திருச்சி கிழக்கு, ஆயிரம் விளக்கு, ராயபுரம், வில்லிவாக்கம், பாபநாசம் (தஞ்சை), கடையநல்லூர் உள்ளிட்ட தொகுதிகள் அதில் அடங்கும. திமுக தலைவராக இருந்த கருணாநிதி அவர்கள் இருந்த போது 16 தொகுதிகள் கேட்டோம். அதே நிலையில் தற்போது முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு செய்ய திமுக தலைவர் ஸ்டாலினிடம் கேட்டு உள்ளோம்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments