ஜாக்டோ ஜியோ உயர்மட்டகுழு கூட்டம் ஒருங்கிணைப்பாளர்கள் சீனிவாசன், சண்முகநாதன் மற்றும் சுரேஷ் ஆகியோரது தலைமையில் திருச்சியில் நடைபெற்றது.
இதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்ற பல்வேறு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து ஜாக்டோ ஜியோ சார்பில் வருகிற 18-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்தப்படும், காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஜாக்டோஜியோ மாநில உயர் மட்டகுழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்.
திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக கொடுத்ததை இனியும் காலம் தாழ்த்தாமல் நிறைவேற்றி தர வேண்டும்.
குறிப்பாக பழைய பென்ஷன் திட்டத்தை உடனே அறிவிக்க வேண்டும், டெட் தேர்வு எழுதிய ஆசிரியர்களுக்கு விளக்கு அளிக்க வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்
உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றார்.
இதனை நிறைவேற்றாவிட்டால் வருகின்ற 18ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த உள்ளோம் அதனைத் தொடர்ந்து அதற்கும் செவிசாய்க்கவில்லை என்றால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்குவோம் என தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
ஒவ்வொரு முறையும் போராட்டம் அறிவிக்கும் போது இந்த அரசு அழைத்து பேசி உடனடியாக உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம் என்கிறார்கள் தற்போது இந்த ஆட்சி முடியும் தருவாயில் உள்ளது ஆனால் இதுவரை எதுவுமே நிறைவேற்றவில்லை அதனால் இம்முறை சமரசம் இல்லாமல் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்.
கடந்த தேர்தலில் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்களுடைய முழு கோரிக்கை..
கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் நாங்கள் எங்களது முடிவை வெளிப்படுத்துவோம்.
ஆனால் இம்முறை எங்கள் போராட்டம் வலுவாக இருக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments