Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஜல் ஜீவன் திட்டம் தமிழகத்தில் 12 சதவீதம் குறைவு மத்திய இணை அமைச்சர் திருச்சியில் பேட்டி

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் பழைய கதவணை கடந்த 2018 மாதம் ஆகஸ்ட் 22 ம் தேதி வெள்ள பெருக்கால் 9 மதகுகள் திடீரென உடைந்தது.

புதிய கொள்ளிடம் கதவணை 2019 மார்ச்சில் ரூ 387 கோடியில் பணிகள் துவங்க அடிக்கல் நாட்டப்பட்டது. பணிகள் முடிக்க இருபத்தி நான்கு மாத காலம். புதிய  கதவணையில் 45 மதகுகள் உள்ள பகுதியில் தற்பொழுது 100%  பணிகள் முடிவடைந்துள்ளது.  

இந்நிலையில் இன்று (20.05.2022)
மத்திய உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் மற்றும் ஜல்சக்தித் துறை  இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல், மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் முக்கொம்பில் கொள்ளிடம் புதிய கதவணையை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர்… ஜல் ஜீவன் திட்டம் தொடர்பான செயல்பாடுகளில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் 12% பின்தங்கி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல் ஜீவன் திட்டங்கள் தொடர்பான செயல்கள் 12% மட்டுமே நடைபெற்று உள்ளதாகவும், இது மற்ற மாநிலங்களை விட இது குறைவு எனவும் குறிப்பிட்டார் . 

2024 ஆம் ஆண்டு ஒவ்வொரு வீட்டிற்கும் இந்தியா முழுவதும் குடிநீர் வழங்கும் இலக்கை நோக்கி பயணிக்கும் நாம் இன்னும் மூன்று மடங்கு அதிவேகமாக இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். 2024 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு திட்டம் செயல்படுத்த இப்பணிகளை மிக வேகமாக செயல் படுத்தினால் நன்றாக இருக்கும் என்றார்.

தமிழகத்தில் உள்ள   அனைவரையும் கேட்டுகொள்வதை தண்ணீர் சேமிப்பதை அவசியம் என உணர வேண்டும். ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் வீணாக்க கூடாது என்றார். ஜல் ஜீவன் திட்டம் தொடர்பான ஏற்கனவே தமிழக அரசுக்கு 1500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது தவணை நிதி கிடைப்பதற்கு அதற்கான வேலைகள் எவ்வளவு விரைவாக நடைபெறுகிறதோ அவ்வளவு விரைவாக அதற்கான நிதி தானாக மாநிலங்களுக்கு வந்துவிடும் என குறிப்பிட்டார்.

முன்னதாக கொள்ளிடம் புதிய கதவணை பார்வையிட்டு மத்திய  அமைச்சர் பிரகலாத் கோவிட் காலத்திலும் இந்த கதவணையை மிக சிறப்பாக  அதிகாரிகள் துணையுடன் பணியாளர்கள் விரைவாக கட்டியுள்ளனர். அவர்களுக்கு பாராட்டை தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *