திருச்சி அருகே செங்குறிச்சி கிராமத்தில் “செங்குறிச்சி செவலை” என்ற ஜல்லிக்கட்டு காளைக்காக அதன் உரிமையாளர்கள் நினைவுமண்டபம் அமைத்து இன்று திறந்து வைத்தனர்.
கடந்த ஆண்டு உயிரிழந்த இந்த காளை, உரிமையாளர்களான சகோதரர்கள் சுப்பிரமணி மற்றும் ராஜீவுக்கு குடும்ப உறுப்பினரைப் போலவே இருந்ததாக கூறப்படுகிறது.
காளையின் மறைவுக்குப் பிறகு, அதற்கான அன்பு நினைவாக அதன் உருவச்சிலையுடன் கூடிய நினைவுமண்டபத்தை அமைக்க அவர்கள் முடிவு செய்தனர்.
இந்நினைவுமண்டபம் இன்று சிறப்பு பூஜைகளுடன் மிக விமர்சையாக திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் திரளாக கலந்து கொண்டு காளைக்கு அஞ்சலி செலுத்தினர்.
ஒரு ஆண்டு கடந்தும் “செங்குறிச்சி செவலை”யை குடும்பத்தினர், குறிப்பாக குழந்தைகள், நினைவு கூர்ந்து வருவதாகவும், ஜல்லிக்கட்டு உரிமையாளர்களுக்கும் காளைகளுக்கும் உள்ள ஆழமான பாசத்தை இந்த நினைவுமண்டபம் வெளிப்படுத்துவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
பி. ராஜசேகர், மாநில தலைவர், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை:
“ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரியமும் பெருமையும் ஆகும்.
செங்குறிச்சி செவலை போன்ற வீரக் காளைகளுக்கு நினைவுமண்டபம் அமைப்பது, அவற்றின் தியாகத்தையும் உரிமையாளர்களின் பாசத்தையும் வெளிப்படுத்துகிறது.”
சுப்பிரமணி, காளை உரிமையாளர்:
“எங்கள் குடும்பத்தில் ஒருவரைப் போலவே இருந்தது செவலை. அது எங்களுக்கு பெருமை சேர்த்தது.
அதற்கான அன்பு நினைவாக இந்த நினைவுமண்டபத்தை அமைத்துள்ளோம்.”
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments