திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள நடுஇருங்களூர் கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழாவினை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. விழாவில் 450 காளைகளும், 300 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர்.
விழாவினை மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் தலைமை வகித்து கொடியசைத்து துவக்கி வைத்தார். லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன் ஜல்லிக்கட்டு உறுதிமொழி வாசிக்க, ஜல்லிக்கட்டு வீரர்கள் உறுதி மொழியினை ஏற்றனர்.

இவ்விழாவில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை போன்ற மாவட்டங்களிலிருந்து 450 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். சிறுகாம்பூர் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவர் மணிவண்ணன் தலைமையிலான மருத்துவகுழுவினர் சிகிச்சை அளித்தனர்.
விழாவில் சிறந்த காளைகளுக்கும், மாடு பிடிவீரர்களுக்கும் எம்எல்ஏ கதிரவன் சார்பில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் மற்றும் ரொக்க பணம் ஆகியவற்றை இருங்களூர் ஊராட்சி மன்ற தலைவர் வின்சென்ட் மற்றும் விழா குழுவினர்கள் வழங்கினர்.

ஜல்லிக்கட்டு விழாவில் .டிஎஸ்பி தலைமையில் 300 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவில் பங்கேற்ற முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது…
ஜல்லிக்கட்டு ஆர்வலர் என்ற முறையில் நானும் இந்த சமத்துவ ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றேன். அரசு வழிகாட்டுதல்படி மாவட்ட நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதேபோன்று வரும் காலங்களில் எந்த தடையுமின்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற வேண்டும். அனைவரும் வீட்டுக்கு ஒரு ஜல்லிக்கட்டு காளை வளர்க்க வேண்டும்.தற்போது வடமாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த ஆர்வமாக உள்ளனர் எனக்கூறினார்.

கட்சி பாகுபாடுயின்றி அதிமுக முன்னாள அமைச்சர் விஜயபாஸ்கர்,மண்ணச்சநல்லூர் திமுக எம்எல்ஏ கதிரவன் ஒரே மேடையில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றது ஆரோக்கியமான அரசியலை நோக்கி செல்வதாக ஒருசிலர் கருத்து தெரிவித்தனர்.
ஜல்லிக்கட்டு விழாவில் போலீஸார் உள்ளிட்ட 31 பேர் காயமடைந்தனர். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் ஒருவர் அனுமதிக்கபட்டுள்ளனர்.
  சமயபுரம் அருகே நடுஇருங்களூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு 
  விழாவில் 590 காளைகளும், 262மாடுபிடி வீரர்களும் பங்கேற்றதில் போலீஸார் உட்பட 31 பேர் காயமடைந்தனர்.இதில் மாட்டின் உரிமையாளர் புதுக்கோட்டை மாவட்டம் களிங்கப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் (43) யை மாடு முட்டியதில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           130
130                           
 
 
 
 
 
 
 
 

 28 January, 2022
 28 January, 2022





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments