திருச்சி துறையூர் நெடுஞ்சாலையில் உள்ள புலிவலம் கிராமத்தை அடுத்துள்ள அபினி மங்கலம் மேற்கு தெருவில் ஜெயராணி சிவலிங்கம் தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் வீட்டை பூட்டி விட்டு ஜெயராணி வெளியே சென்றுள்ளார். பின்னர் இரவு வீடு திரும்பிய போது கிரில் கேட் மற்றும் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் உள்ளே சென்று பார்த்தபோது 29 சவரன் நகையை திருடர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக புலிவலம் காவல் நிலையத்தில் ஜெயராணி புகார் அளித்துள்ளார்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் கைரேகை பதிவுகளை எடுத்து ஆய்வு மேற்கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.co/nepIqeLanO







Comments