Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

அன்பில் அறக்கட்டளை சார்பாக வேலை வாய்ப்பு முகாம் 

திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும்மான அன்பில் அறக்கட்டளையின் நிறுவனருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது தொகுதி இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் அன்பில் அறக்கட்டளையின் மூலமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாமினை நடத்தி வருகின்றனர்

மேலும் இதன் ஒரு பகுதியாக அன்பில் அறக்கட்டளையின் சார்பாக திறுவெறும்புர் முக்குளத்தோர் மேல்நிலை பள்ளியில் வேலைவாய்ப்பு முகாமானது நடைபெற்றது இந்த முகாமில் சுமார்120 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றது மேலும் இந்த முகாமில் சுமார் 3000 மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர்

இந்நிலையில் முகாமில் சிறப்பு விருந்தினராக திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு தேற்வானவர்களுக்கு பணி நியமன அனைகளை வழங்கினார்

மேலும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் அமைச்சர் உரையாற்றியதாவது நமக்கான ஒரு வாய்ப்பை பயன்படுத்தி நம்மால் என்ன செய்ய முடியும் எனவும் குறிப்பாக இந்த சமுதாயத்திற்கு நம்மால் என்ன செய்ய முடியும் என தோன்றியதால் தான் புரவலர் அன்பிலார் அவரின் பெயரில் அன்பில் அறக்கட்டளையின் மூலமாக நம்மால் முடிந்தவரை மருத்துவ முகாமாக

இருந்தாலும் சரி இது போன்ற வேலைவாய்ப்பு முகாமாக இருந்தாலும் 2016 ல் இருந்து கடந்த 10 ஆண்டுகள் வரை நம்மால் முடிந்த உதவிகளை இன்று வரை செய்து வருகிறோம் என்றும் எல்லோரும் பிறக்கின்றோம் எல்லோரும் மறைகின்றோம் என்றில்லாமல் நம்மால் முடிந்த உதவிகளை இளைய சமுதாயத்திற்கு செய்து வருவதாகவும், மேலும் நான் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தாலும் எனது சொந்த வீடான திருவெறும்பூர் தொகுதியில் இந்த நிகழ்வு நடைபெறுவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றும் எனவே இந்த முகாமிற்கு வருகை புரிந்துள்ள அனைத்து இளைய சமுதாயத்தினரையும் நான்

வரவேற்பதாகவும் இங்கு கலந்து கொண்டுள்ள இளைஞர்கள் ஒரு காலத்தில் பெரிய தொழிலதிபராக வரலாம் என்றும் அதற்கு அடித்தளமாக இருப்பது இந்த அன்பில் அறக்கட்டளை தான் என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்வதாகவும் நீங்கள் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அது ஒரு பறவைக்கு இரு சிரகுகள் உள்ளது அதில் ஒரு சிறகு தன்னம்பிக்கை மற்றொரு சிறகு விடா முயற்சி என்றும் சொல்வார்கள் எனவே

உங்களுடைய வளர்ச்சி நாட்டுடைய வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருக்க வேண்டும் என்றும் எனவே தமிழக முதல்வர் அவர்கள் கனவு திட்டமான நான் முதல்வன் திட்ட மூலம் சுமார் 30 லட்சம் பேருக்கு பல பயிற்சிகள் அளிக்கப்பட்டு தற்பொழுது இரண்டரை லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருவதாகவும் இது போல் முதல்வர் கொண்டுள்ள திட்டங்கள் தான் எங்களுக்கு ஊன்றுகோலாக இருப்பதாகவும் இதனால் தான் நாங்கள் அன்பில் அறக்கட்டளையை நடத்தி வருவதாகவும் எடுத்துரைத்தார்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *