திருச்சி நீதிமன்றத்தில் சீமான் மீது தொடரபட்ட வழக்கில் டிஐஜி ஆஜர் – மே 8ம் தேதி சீமான் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் குடும்பத்தினரை அவதூறாக பேசியதாகவும் சமூக வலைதளங்களில் ராமலட்சுமி தவறான கருத்துக்களை பதிவிட்டதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்மீது, டிஐஜி வருண்குமார் திருச்சி நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு.
குற்றவியல் நீதிமன்றம் எண் 4ல், நீதிபதி விஜயா முன்பு, டிஐஜி வருண்குமார் தனது வழக்கறிஞர் முரளிகிருஷ்ணா உடன் ஆஜரானார்.சீமான் மீது டிஐஜி சார்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை மே 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
சீமான் தரப்பு வாதங்கள் எழுத்துப்பூர்வமாக நீதிபதியிடம் முன்வைக்கப்பட்டது, மே எட்டாம் தேதி நடைபெறும் வழக்கம் விசாரணையின் போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்டாயமாக ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டதாக டிஐஜி தரப்பு வழக்கறிஞர் பேட்டியில் தெரிவித்தார்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகும்படி பலமுறை சீமானுக்கு சமன் அனுப்பப்பட்டும் நீதிமன்றம் கடுமையாக நடந்து கொண்டதன் பேரிலேயே ஒருமுறை மட்டுமே ஆஜராகி உள்ளார், அதேநேரம் இந்த வழக்கு தொடர்பாக எந்த ஒரு சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட எங்களது தரப்பில் உடன்பாடு இல்லை என்றார்.
கடந்த ஏப்ரல் எட்டாம்தேதி சீமான் ஆஜரானபோது, பெரும்பாலான கார்களில் வந்த நாம்தமிழர் கட்சியினர் டிஐஜி காரின் அருகே காரை நிறுத்திவிட்டு, சீமான் வாழ்க என கோசமிட்டும் ராமஜெயம் வழக்கு என்ன ஆச்சு என எனக்கேட்டு மிரட்டல்விடுத்ததாகவும், இதுதொடர்பாக டிஐஜி தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தார்.
உடல் சோர்வு ஏற்படும் பட்சத்தில் சகோதரிகள் மற்றும் மகள், தாயாருடன் உறவு வைத்துக் கொள்ளலாம் என பெரியார் பேசியதாக, பெரியார் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாக ஜனவரி ஒன்பதாம் தேதி வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் சார்பில் மணப்பாறை காவல் நிலையத்தில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று 28ம் தேதி
சீமான்மீது காவல்நிலையம் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டநிலையில், விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments