திருச்சி, நவம்பர் 11ம் தேதி இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியில் “கலாம் கனவுகள் – மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி” இன்று காலை 10:00 மணிக்கு குத்துவிளக்கு ஏற்றி விழா இனிதே துவங்கியது.
இந்நிகழ்ச்சியை இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தின் செயலாளர் இன்ஜி. க. ராஜசேகரன் அவர்கள் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் டாக்டர் க. பாலகிருஷ்ணன், இயக்குனர் மற்றும் முதல்வர், இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி, டாக்டர் கே. ஸ்ரீநிவாசன், ஆலோசகர், இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்கள் மற்றும்
தலைவர், இந்திய ரெட்கிராஸ் சொசைட்டி, ஸ்ரீரங்கம், டாக்டர் ஆர். அருண் பிரகாஷ், உதவி பேராசிரியர் (தேர்வு நிலை), கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை, அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி, மிஸ்டர் மனோஜ் சங்கர், இணை நிறுவனர், நெமோ கேர் வெல்நெஸ் பிரைவேட் லிமிடெட், ஹைதராபாத், தெலுங்கானா, மற்றும் மிஸ்டர் எஸ். எம். மனோஜ் குமார், திட்ட இணை அலுவலர், ஸ்டார்ட் அப் டி.என், திருச்சி பிராந்திய மையம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக சிறப்புரை ஆற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் டாக்டர் எம். அனுஸுயா, பதிவு அலுவலர் (Registrar), இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்கள், சிறப்பு விருந்தினர்களை பாராட்டி (felicitate) வாழ்த்துகள் தெரிவித்தார். மேலும் டாக்டர் கார்த்திகேயன், துணை முதல்வர் (Vice Principal), பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
மாணவர்கள் தயாரித்த பல்வேறு தொழில்நுட்ப மற்றும் புதுமைமிக்க திட்டங்கள் இக்கண்காட்சியில் வெளிப்படுத்தப்பட்டன. இந்நிகழ்வு முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் “இளைய தலைமுறை புதுமையாளர்கள் உருவாக வேண்டும்” என்ற கனவை நினைவூட்டும் வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது.
அறிவியல் கண்காட்சியில் 25-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து சுமார் 200 மாணவர்கள் கலந்து கொண்டனர். சிறந்த திட்டங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன:
முதல் பரிசு – Campion Anglo-Indian Higher Secondary School, இரண்டாம் பரிசு – Chettinadu Public School, மூன்றாம் பரிசு – Kamala Niketan Montessori School
மேலும் 10 மாணவர்களுக்கு ஆறுதல் பரிசுகள் மற்றும் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா தேசிய கீதத்துடன் இனிதே நிறைவுற்றது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments