Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பொதுமக்களிடம் கனிவான அணுகுமுறை: திருச்சி மாவட்ட எஸ்.பி. அதிரடி அறிவுரை!

இன்று(16.03.2026) ம் தேதி காலை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வ நாகரெத்தினம், இகாய, அவர்கள் பெரிய கரூப்பூர் பகுதியில் உள்ள ராஜ்மோகன் மண்டபத்தில் ஜீயபுரம் உட்கோட்ட காவல் ஆளிநர்களுக்கு (150) பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களை எவ்வாறு காவல் நிலையங்களில் அணுகுவது மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை எவ்வாறு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவான அறிவுரைகளை வழங்கினார்.

மேலும், காவல் ஆளிநர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் வாராந்திர ஓய்வு வழங்குதல் மற்றும் அவர்களின் குறைகளை கேட்டறிந்தும், எதிர் வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்-2026 முன்னிட்டு காவல் ஆளிநர்கள் அனைவரும் திறம்பட பணிபுரிந்து எந்தவித அசம்பாவிதமும் நடைபெறா வண்ணம் பணிபுரிய அறிவுரைகள் வழங்கினார்.

இவ்வாறு மேற்படி கலந்தாய்வு கூட்டங்களில் கலந்து கொண்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள், காவல் கண்காணிப்பாளர் அவர்களால் வழங்கப்பட்ட அறிவுரைகளை தவறாது கடைப்பிடித்து காவல் துறைக்கு எந்தவித களங்கமும் ஏற்படாவண்ணம் பணிபுரிய உறுதியேற்று சென்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *