கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடெமியில் நடப்பாண்டு நடைபெற்ற இந்திய
குடிமைப்பணித் தேர்வில் வெற்றி
பெற்றவர்களுக்குபாராட்டுவிழா
நடைபெற்றது.
மத்திய அரசின் 21 இந்திய குடிமைப் பணிகளுக்கு கடந்த 2024-ஆம் ஆண்டுக்கான நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் ஏப். 22-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் மாணவர்கள் 138பேர் வெற்றி பெற்று சாதனை படைத்திருந்தனர். இவர்களுக்கான பாராட்டு விழா சென்னை தியாகராய நகர், ஜிஎன் செட்டி சாலையிலுள்ள வாணி மஹாலில் சமீபத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் முதன்மைச் செய லர் ஜவஹர் ஐ.ஏ.எஸ் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கிங்மேக் கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் மாணவர்களான, இந்திய அளவில் முறையே 125-ஆவது இடம்
பெற்ற எஸ்.சரண்யா, 784-ஆவது இடம்பெற்றகே.ஹரிகிருஷ்ணன், 259 -ஆவது இடம் பெற்ற டி.த ணிகையரசன், 298-ஆவது இடம் பெற்ற எஸ்.சாய் கிரண், 546-ஆவது இடம் பெற்றஎம்.வி.கவின் மொழி, 639-ஆவது இடம் பெற்ற எம்.அருண் பிரகாஷ், 691-ஆம் இடம் பெற்ற கரண் அய்யப்பா, 862-ஆம் இடம் பெற்ற கிரண்ட் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் 21-ஆம் இடம் பெற்ற கீர்த்திகா ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து, நினைவுப் பரிசுகளை யும் வழங்கினார்.
தொடர்ந்து கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் நிர்வாக
இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன் சிறப்புரை யாற்றினார்.இவ்விழாவில், முன்னாள் செயலர் விவேக் ஹரிநாராயன், முன்னாள் மத்திய சுங்க மற்றும் கலால் கூடுதல் ஆணையர் தமிழ் வேந்தன், முன்னாள் முதன்மை செயலர் கேப்டன் சிவசைலம், ஜி.பா லச்சந்திரன், அர்ச்சனா ராமசுந்தரம் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி அருண், ஐஆர்எஸ் அதிகாரி நந்த குமார், டாக்டர் பி.விஜயகுமார் உள்ளிட்ட
அதிகாரிகள் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இந்திய குடிமைப்பணி தொடர்பான அறிவுரைகளையும், நினைவுப் பரிசுகளையும் வழங்கி னர்.தொடர்ந்து, கிங்மேக்கேர்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் நிகழாண்டுக்கான பயிற்சி வகுப்புகள் வரும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் தொடங்கவுள்ளன. இதற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.பட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டுமல்லாமல் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாண வர்களும் இப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம் என கிங்மேக் கேர்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் நிர்வாக இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநா தன் தெரிவித்துள்ளார். கூடுதல்
தகவல்களை தெரிந்துகொள்ள
கைப்பேசி: 94442 27273என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்ண
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments