Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சடையாண்டி நகரில் அறிவுசார் மையம் – ரூ.1.31 கோடி நிதி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு

திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உள்பட்ட திருவரங்கம் சட்டமன்றத் தொகுதி, கே.கள்ளிக்குடி ஊராட்சி, பூங்குடி கிராமம், சடையாண்டி நகரில் பட்டியல் இனமக்கள் அதிகளவில் வாழ்கின்றனர்.

ஆகவே, பட்டியல் இனக் குழந்தைகள் மற்றும் மாணவர்களின் அறிவு மேம்பாட்டிற்காக எனது தொகுதியைச் சேர்ந்த கே.கள்ளிக்குடி ஊராட்சி, சடையாண்டி நகருக்கு ஒரு அறிவுசார் மையம் வேண்டும் என்று 05.06.2025 அன்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் மா.மதிவேந்தன் அவர்களுக்கு கடிதம் மற்றும் அலைபேசி வாயிலாக வேண்டுகோள் விடுத்தேன்.மேலும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நடப்பு ஆண்டுக்கான நிதிப்பகிர்வு செய்யவேண்டிய அவசரச் சூழல் இருந்ததால், அதற்கான இடத்தின் புல எண் மற்றும் நில வரைபட விபரங்களை உடனடியாகப் பெற்றுத் தருமாறு திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் சகோதரர் மணவை தமிழ்மாணிக்கம் அவர்களைப் பணித்தேன்.

06.05.2025 மறுநாள் அவரும், கே.கள்ளிக்குடி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கே.எஸ்.சுந்தரம், பூங்குடி ஊர் பட்டயக்காரர் வீரமுத்து, மதிமுக மணிகண்டம் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆரோக்கிய ரெக்ஸ், விவசாய அணி பூங்குடி சின்னையா, மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கப்பாண்டியன், பொறியாளர் ஜோதி, கிராம நிர்வாக அலுவலர் பாரதி ஆகியோர் சடையாண்டி நகர் சென்று, அந்த இடத்துக்கான புல எண், வரைபடம் போன்ற ஆவணங்களை உடனடியாக எனக்கு அனுப்பி வைத்தனர்.

அதை நானும் WhatsApp வழியாக அமைச்சர் அவர்களுக்கு அனுப்பினேன். தற்சமயம் எனது கோரிக்கையை ஏற்று கே.கள்ளிக்குடி ஊராட்சி, சடையாண்டி நகருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ரூ.1 கோடி 31 லட்சத்து 31 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து, விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர் இவர்களுக்கான பயிற்சி அரங்கம், நிர்வாக அலுவலகம், கணிப்பொறி அறை, நூலகம் மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கூடிய அறிவுசார் யைம் அமைக்க உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் அவர்களுக்கும், துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் என் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அரசியல் பொதுவாழ்வில் கடந்த ஏழு வருடங்களாகப் பயணித்து, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்ற 18 மாதங்களில், இதுபோன்ற மக்களுக்கு பயன்தரும் சில நன்மைகளைப் பெற்றுத் தருகிறேன் என்ற பெரும் மகிழ்வில் அயற்சி நீங்கி உழைக்கத் தயாராகிறேன்.

என் திருச்சி தொகுதி மக்களின் வளர்ச்சிக்காக, ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக என் கடமையைச் செய்கிறேன் என்ற மன திருப்தி ஓரளவு கிடைத்திருக்கிறது என்ற மகிழ்வில் இவற்றைப் பகிர்ந்து கொள்கின்றேன் என்று கூறினார் துரை வைகோ அவர்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *