திருச்சி பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மை கண்காட்சி!

திருச்சி பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மை கண்காட்சி!

திருச்சி பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு கொலு பொம்மைகள் கண்காட்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தொடங்கி வைத்தார்.

திருச்சி பூம்புகார் விற்பனை நிலையம் துவங்கப்பட்டு 49வது ஆண்டாக செயல்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் நலிவடைந்த வியாபாரிகளிடம் இருந்து வாங்க பெற்ற கொலு பொம்மைகள் 50 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை விற்பனைக்கு கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31ம் தேதி வரை கொலு கண்காட்சி நடத்த பூம்புகார் திட்டமிட்டுள்ளது.

Advertisement

இந்த கண்காட்சியில், கொலு, கொண்டபள்ளி பொம்மைகள், மரப்பாச்சி பொம்மைகள், காகிதக் கூழ் பொம்மைகள், மண் பொம்மைகள், நவரத்தின கற்கள் பொம்மைகள் என கண்காட்சி விற்பனைக்கான கல்கத்தா, மணிப்பூர், ராஜஸ்தான், ஒரிசா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் கைவினைப் பொருட்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.சென்ற ஆண்டு கொலு கண்காட்சியில் ரூ.20 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

https://youtu.be/hO6NVGIYrpo
Advertisement