கோணக்கரை மயானம் முதல் குடமுருட்டி செல்லும் சாலை 05.11.2025ம் தேதி முதல் தற்காலிகமாக மூடப்படுகின்றது மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் அவர்கள் தகவல்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண்.09, உறையூர் முதல் குடமுருட்டி கோணக்கரை கரூர் புறவழிச்சாலை வரை,
உய்யகொண்டான் ஆறு கிழக்கு கரைப் பகுதியில் 2.120 கி.மீ நீளத்திற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதில், கோணக்கரை சாலை பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கான கான்கிரீட் தூண்கள் அமைப்பதற்கு, கோணக்கரை மயானம் முதல் குடமுருட்டி செல்லும் சாலை 05.11.2025ம் தேதி முதல் தற்காலிகமாக மூடப்படுகின்றது. உறையூர் முதல் கோணக்கரை மயானம் வரையிலான சாலை பயன்பாட்டில் இருக்கும்.
மேற்கண்ட பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுமான பணி முடிவுறும் வரை, இச்சாலைக்கு மாற்று சாலையாக அண்ணாமலை நகர் பிரதான சாலையினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments