மண்டல அளவிலான பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் போட்டிகள் திருச்சி கே. ராமகிருஷ்ணன் கல்லூரியில் நடைபெற உள்ளது.

மண்டல அளவிலான பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் போட்டிகள் திருச்சி கே. ராமகிருஷ்ணன் கல்லூரியில் நடைபெற உள்ளது.

திருச்சி கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை மாணவர் பிரிவும்,  இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிஸ் ( இந்தியா ) மாணவர் அமைப்பு மற்றும் ISTE மாணவர் அமைப்பும் இணைந்து வளர்ந்து வரும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான அறிவியல் கண்டுபிடிப்பு சாதனை சிறப்பு திட்டம் ZOLSIA'21 என்ற பெயரில் மண்டல அளவில் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.

இதில் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள பள்ளி மாணவர்கள் பங்கு பெறலாம். மேலும் அவர்களுடைய படைப்புகளை வீடியோவாக பதிவு செய்து கல்லூரியில் கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரிக்கு அனுப்ப வேண்டும். சிறந்த படைப்புகளுக்கு வரும் மார்ச் 25ஆம் தேதி பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. மேலும் பங்கு பெறும் அனைத்து மாணவர்களுக்கும் இ-சான்றிதழ் வழங்கப்படுகிறது.

எட்டு முதல் பத்தாம் வகுப்பு வரை ஒரு பிரிவும், 11 மற்றும் 12 ஆகிய இரண்டு வகுப்புகளுக்கும் ஒரு பிரிவின் கீழ்  போட்டிகளில் நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் மாணவர்கள் குழுவாகவும் கலந்து கொள்ளலாம். 23 ஆம் தேதி நடைபெற இருக்கும் வினாடி-வினா போட்டியில் மாணவர்கள் தனித்தனியாக பங்குபெற வேண்டும் என்றும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது .

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I