Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

மணிகண்டத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து திருச்சியின் துணை நகரமாக்குவேன் என கு ப  கிருஷ்ணன் வாக்குறுதி

மணிகண்டத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து திருச்சியின் துணை நகரமாக மாற்றுவேன் என தேர்தல் பரப்புரையில் ஸ்ரீரங்கம் வேட்பாளர்  
கு ப  கிருஷ்ணன் வாக்குறுதி.

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், ஸ்ரீரங்கம் தொகுதியின் முன்னாள் அமைச்சருமான கு ப கிருஷ்ணன் மணிகண்டம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட 
  இடங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக கள்ளிக்குடி யில் பொதுமக்களிடம் உரையாற்றுகையில் அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்.

குளத்துகரை பகுதியில் சாலை அமைத்து தரப்படும். பேருந்து வசதி செய்து  தரப்படும் என்று கூறி பிரச்சாரத்தை மேற்கொண்டார் .மேலும் அப்பகுதி மக்களுக்கு மயானத்திற்கு பிரேத்த்தை எடுத்து செல்வதற்கு வைப்பு நிதியில் இருந்து காட்டாறு வாய்க்காலில்பாலம் அமைத்து தரப்படும் என்று கூறினார்.

மணிகண்டம் மேக்குடி காலணியில் கூறுகையில் மணிகண்டத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து திருச்சியின் துணை நகரமாக மாற்றுவேன் என தேர்தல் பரப்புரையில் கு ப  கிருஷ்ணன் வாக்குறுதி.
 திமுக ஆட்சியில் இயற்கை வளங்கள் அனைத்தும் சுரண்டப்படுகிறது ஆனால் அதிமுக ஆட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் அவை அனைத்தும் காக்கப்படுகிறது.

கள்ளிக்குடிஅம்பேத்கார் நகர் மக்களுக்காக வீட்டுமனை பட்டா வழங்கப்படும்.30 ஆண்டுகள் ஒரே இடத்தில் இருந்தால் மட்டுமே வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும் என்பதற்கான காரணம் ஏழை மக்கள் தவிர வசதி படைத்தவர்கள் யாரும் இந்த சலுகையை அனுபவித்துவிட  கூடாது என்பதற்காகதான்.
ஹரிபாஸ்கர் காலனி, கள்ளிகுடி ,மணிகண்டம், ஆலம்பட்டி,தீரன் மாநகர்,
  மேல நாகமங்கலம், அண்ணாநகர், எம்ஜிஆர் நகர்,தென்றல் நகர்உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் கு.ப கிருஷ்ணன் வாக்குகளை சேகரித்தார்.

அப்போது மணிகண்டம் ஒன்றிய செயலாளர் முத்துகருப்பண்,த.மா.க்ஒன்றிய செயலாளர் மகேஸ்வரன்,மாவட்ட எம்ஜி ஆர் மன்ற துணை செயலாளர்நல்லுசாமி,மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *