திருச்சி திருப்பராய்த்துறை காவிரி கரையில் அமைந்துள்ளது தாருகாவனேசுவர் கோயில், இறைவன் பிச்சாடனராய் சென்று தாருகாவனத்து முனிவர்களின் ஆணவத்தை அகற்றி அருள்புரிந்த திருத்தலமாகும்.
நோய்களை தீர்க்கும், அறியாமை மற்றும் ஆணவத்தை அகற்றும் வல்லமை உடையவர் பிச்சாடனார் என்பதும், தேவார பாடல்பெற்ற திருக்கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் யாவும் நிறைவு பெற்று கடந்த 27ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
இன்றையதினம் நான்காம் கால யாகசாலை பூஜைகள் பூர்ணாஹூதியுடன் நிறைவுபெற்று, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்கள் யாவும் மேளதாளங்கள் முழங்க புறப்பாடாகி, பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கிட பசும்பொன் மயிலாம்பிகை மற்றும் ஸ்ரீ தாருகாவனேஸ்வரர் சுவாமி மூலஸ்தானம் மற்றும் ராஜகோபுரம், ஏனைய பரிவார தெய்வங்களின் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு அஷ்டபந்தன ஜீரணோதாரன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக வைபவத்தில், அறநிலையத்துறை அதிகாரிகள், திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments