அரசியல் கட்சிகளை அசால்ட்டாக கலாய்த்த KPY -சுஜித்தின் எஞ்சாமி  எலக்சன் வெர்சன் 

அரசியல் கட்சிகளை அசால்ட்டாக கலாய்த்த KPY -சுஜித்தின் எஞ்சாமி  எலக்சன் வெர்சன் 

என்ஜாய் எஞ்சாமி  பாடல் ஒரிஜினல் வெர்சன்  எந்த அளவுக்கு வைரலானதோ அதைவிட  மாற்றியமைக்கப்பட்ட வரிகளோடு என்ஜாய் எஞ்சாமி பாடல் வைரலாய்  சமூக வலைதளங்களில் வலம் வந்துட்டு இருக்கு.

https://youtu.be/a3k6ItFT-n0

கடந்த இரண்டு நாட்களாக  அரசியல் கட்சிகளை விமர்சிக்கும் விதமாக ஒரு விழிப்புணர்வு பாடலாக மாற்றி  என்ஜாய் எஞ்சாமி  என்ற பாடல்  இணையதளங்களில் வைரலாகி வந்து கொண்டிருக்கிறது.

இப்பாடலை மாற்றி அமைத்த Kpyசுஜித்திடம் கேட்ட போது சிரித்துக் கொண்டே பேசத்தொடங்கினார்.


 என் ஊர் அறந்தாங்கி அரசியல் பின்னணி எதுவும் கிடையாது.  எனக்கு பாட்டு எழுதுவது ரொம்ப பிடிக்கும். விஜய் தொலைக்காட்சியில் Kpy season 5மற்றும் Champion 1&2 கலந்துகொண்டேன் . 
சிங்கர் பசங்கனு  ஒரு யூடியூப் சேனலில்  நான் நிறைய   விழிப்புணர்வு பாடல்களை வெளியிட்டு இருக்கேன்.
 அரசியல் கட்சிகளை விமர்சிக்க வேண்டுமென்பது   என்னுடைய நோக்கம் கிடையாது .மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துனும் என்று  முடிவு பண்ணப்போ இந்த பாடலை வெளியிட்டோம்.


  இப்போதைக்கு டிரண்டான ஒரு பாடலை எடுத்து பண்ணுவோம் மக்களுக்கு இன்னும் சீக்கிரமா போய் சேரும் என நெனச்சேன் என்ஜாய் எஞ்சாமிபாடலை எடுத்துப்பண்ணேன்.
 என்னுடைய பெயர் தெரியாமல் மீம்ஸ் மூலமாகவும் இதுவரை வைரல் ஆகி இருந்துச்சு. அப்புறம் தான் என்னுடைய பெயர் இதுல வெளிப்படையாக தெரிய வந்துச்சு .சும்மா இரச்சிட்டு போகாம வரிகளின் அர்த்தங்களை   மக்கள் புரிஞ்சுக்கணும் அதுதான் என்னுடைய  மிகப் பெரிய ஆசை.
 ஒரு சாமானியனுக்கு உள்ளுக்குள்ள இருக்க எல்லா விஷயங்களையும் இந்த பாடலா  நான் சொல்லியிருக்கேன்.
 யாரையும் இழிவுபடுத்தும் யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் இந்த பாடலை எழுதவில்லை.
 என்ன பொறுத்தவரை மக்களுக்கு இது மூலமா விழிப்புணர்வு உண்டாகும் என்ற எண்ணம் மட்டும்தான் என்கிறார் சுஜித்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW