உதயநிதி ஸ்டாலின் பேச்சு :
திருச்சி மாநகரத்துக்கு அடுத்தப்படியாக வேகமாக வளரும் ஊர்
மொழிக்காக கலைஞர் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து போராடிய கல்லக்குடி லால்குடியில் தான் உள்ளது.
மறைந்த அன்பில் தர்மலிங்கம், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகிய மூன்று அமைச்சர்களை தந்த ஊர் லால்குடி தான்.
பஞ்சப்பூரில் மிகப்பெரிய பேருந்து நிலையம் கட்டிய அமைச்சர் கே.என்.நேரு
தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சி பணிகளை திராவிட மாடல் அரசு செய்து வருகிறது.
நான் முதல்வன், தமிழ் பெண்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் இந்தியாவே
திரும்பி பார்க்கும் மகளிர் உரிமை தொகை திட்டத்தையும் நிறைவேற்றி உள்ளோம்.
மகளிர் உரிமை தொகையை நிறுத்த சிலர் சூழ்ச்சி செய்தார்கள் ஆனால் நம் முதலமைச்சர் அதை முறியடித்து 5000 ரூபாய் வழங்கி உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் மீண்டும் திமுக ஆட்சி அமைத்த உடன் உரிமை தொகை ரூ.2000 உயர்த்தி வழங்கப்படும் என்கிற வாக்குறிதியை தந்துள்ளார்.
தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த மகிழ்ச்சியிலும் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முடக்க நினைத்தவர்கள் பெரிய அதிரிச்சியிலும் உள்ளார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments