பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு செப்டம்பர் 2015 முதல் அக்டோபர் 2018 வரையிலான 10 பருவங்களில் தேர்வெழுதிய தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோக மையத்தில் தேர்வர்களால் நேரில் பெறப்படாமலும், அஞ்சல் மூலம் உரிய தேர்வர்களுக்கு அனுப்பி பட்டுவாடா ஆகாமலும், அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் திருச்சி–01, அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் திரும்பப் பெறப்பட்டுள்ளன. தேர்வு திட்ட விதிமுறைகளின்படி மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டாண்டுக்குப் பின்னர் அழிக்கப்படும்.

எனவே, செப்டம்பர் 2015 முதல் அக்டோபர் 2018 வரையிலான 10 பருவங்களில் தேர்வெழுதி மதிப்பெண் சான்றிதழ் பெறப்படாத தனித்தேர்வர்களுக்கு இதுவே இறுதி வாய்ப்பாகும் என்பதால் இத்தருணத்தை பயன்படுத்தி ஒரு வெள்ளைத்தாளில் மதிப்பெண் சான்றிதழ் கோரும் விவரத்தை குறிப்பிட்டு பதிவெண், தேர்வெழுதிய பருவம், பிறந்த தேதி, தேர்வெழுதிய பாடம் மற்றும் தேர்வு மையத்தின் பெயர் ஆகிய விவரங்களைக் குறிப்பிட்டு அரசுத் தேர்வுகள், உதவி இயக்குநர் அலுவலகம், 16/1, வில்லியம்ஸ் சாலை, மத்திய பேருந்து நிலையம் அருகில், திருச்சிராப்பள்ளி–01 என்ற முகவரியில் (31.12.2023) தேதிக்குள் அலுவலக வேளை நாட்களில் நேரில் பெற்றுக்கொள்ளலாம் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மேற்கண்ட விவரப்படி, செப்டம்பர் 2015 முதல் அக்டோபர் 2018 வரையிலான பருவத்திற்கு பின் தேர்வெழுதிய பருவங்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழையும் பெற்றுக்கொள்ளலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments