திருச்சி நீதிமன்றம் வளாகத்தில் ஜூலை 1 முதல் புதிய குற்றவியல் திருத்த சட்டங்கள் அமலாக உள்ளதால் உயர்நிதிமன்றம் சுற்றறிக்கையின்படி பாரத்திய சாக்ஸ்யா அதினியம் பற்றிய சட்ட பயிற்சி வகுப்பை சுகுணாலா அகாடமி மற்றும் குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் இணைந்து நடத்திய முகாமை மாவட்ட நீதிபதி மணிமொழி மற்றும் தலைமை குற்றவியல் நீதிபதிமீனா சந்திரா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

முகாமில் பயிற்சியாளர்கள் சுரேஷ், அருண் மற்றும் குற்றவியல் சங்க செயலாளர் P. V. வெங்கட், துணை தலைவர் சசிகுமார், இணை செயலாளர் விஜய் நாகராஜன், ஆகியோர் மற்றும் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் செய்திருந்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments