பாவை பவுண்டேஷன் மற்றும் ஸ்ரீ ஆதிசங்கரர் தொழில் பயிற்சி மையம் இணைந்து நடத்திய “போதை பொருள் இல்லா சமூகத்தை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு நிகழ்வு ஸ்ரீ ஆதிசங்கரர் தொழில் பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த நல்லங்கால் (மனநல ஆலோசகர்) ஒருங்கிணைந்த குடிபோதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் (சாக்சீடு)

மாணவர்கள் மத்தியில் போதை பொருளின் தாக்கம் மற்றும் அதில் இருந்து எவ்வாறு நம்மை தற்காதுக்கொள்வது மேலும் உடல் அளவிலும், மனதளவிலும் போதை வஸ்துக்களால் ஏற்படுகின்ற தீங்குகள் பற்றியும் மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார். மேலும் மாணவர்கள் “போதை பொருள் இல்லா சமூகத்தை உருவாக்குகவோம் என்ற விழிப்புணர்வு நிகழ்வில் தங்களது பொன்னான கையொப்பத்தை பதாகையில் இட்டுச் சென்றனர். இந்நிகழ்வை பாவை பவுண்டேஷன் மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் செய்திருந்தார்.


#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments