திருச்சிராப்பள்ளி, மார்ச் 13, 2025 – நேஷனல் கல்லூரி (தன்னாட்சி), மத்திய நூலகம், நூலக மற்றும் தகவல் அறிவியல் துறை சார்பில் CLISc – 2024 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா மார்ச் 13, 2025, புதன்கிழமை, மதியம் 12.01 மணிக்கு ஆடியோ-விசுவல் அரங்கில் நடத்தப்பட்டது.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நூலக மற்றும் தகவல் அறிவியல் துறையின் பேராசிரியர் டாக்டர். ஆர். பாலசுப்ரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். அவர் நூலகவியல் துறையின் முக்கியத்துவத்தை விளக்கி, மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.இந்த ஆண்டு 15 மாணவர்கள் CLISc சான்றிதழைப் பெற்றனர், மேலும் அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது நேஷனல் கல்லூரியின் கல்வி தரத்தையும், மாணவர்களின் பாடத்திட்டத் திறமையையும் பிரதிபலிக்கிறது.
நிகழ்ச்சியில் நூலகர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் டாக்டர். டி. சுரேஷ்குமார், முதல்வர் டாக்டர். கே. குமார், செயலாளர் திரு. கே. ரகுநாதன் ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்களை பாராட்டினர். இவ்விழா மாணவர்களுக்கு மறக்க முடியாத ஒரு முக்கிய நாளாக அமைந்தது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments