திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் நூலக தின விழா (31.03.2023) நேற்று நூலக அரங்கில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் கி. குமார். தம் தலைமை உரையில் மாணவர்கள் நூலகத்தைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்துப் பேசினார்.
நூலகத்தின் ஆண்டறிக்கையை நூலகர் முனைவர் த.சுரேஷ் குமார் வாசித்து அளித்தார். ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக நூலகத்தைப் பயன்படுத்திய சுமார் 50 மாணவர்களுக்குக் கல்லூரியின் செயலர் கா.ரகுநாதன் பதக்கங்களையும், பரிசுகளையும் வழக்கிக் கௌரவப்படுத்தினார். கல்லூரி துணைமுதல்வர் முனைவர் இளவரசு வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்வில் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் இரா. இராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ‘வாசிப்பு ஒரு வசம்” என்னும் பொருண்மையில் உரையாற்றினார். அப்போது அவர், ‘கல்வியின் பயன் வெறும் வேலைவாய்ப்பைப் பெறுவது மட்டுமே அல்ல; ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் நாட்டுக்கும் உதவும் நல்ல சிந்தனைகளை உருவாக்குவதே கல்வியின் ஆகப் பெரும்பயன்’ என்றார்.
மேலும், நிலவும் சூழலில் இருந்து கற்றல், விருப்பத்துடன் கற்றல், கற்றலுக்கான வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ளுதல், கல்வியைச் சிந்தனையாக மாற்றிக்கொள்ளும் திறமை போன்றவற்றை விளக்கினார், இந்நிகழ்வில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஈஸ்வான், பிற துறைப் பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் பெருந்திரளாகப் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.
முன்னதாக யுவஸ்ரீ மாணவர் வரவேற்புரை நல்க, ஹரிகிருஷ்ணன் மாணவர் நன்றி கூறினார். இந்நிகழ்வைக் கல்லூரி நூலகர் முனைவர் த. சுரேஷ் குமார் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments