திருச்சி மலைக்கோட்டை, பாபு ரோடு, சின்ன கடை வீதி, மார்க்கெட், பாலக்கரை போன்ற பகுதிகளில் மாலை நேரத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பொழுதுபோக்கிற்காக மாஞ்சா கயிறு பயன்படுத்தி பட்டம் விட்டுக் கொண்டிருக்கின்றார்கள். மொட்டை மாடிகளின் விளிம்பில் நின்றுகொண்டு ஆபத்தை உணராமல் இதை அவர்கள் செய்து வருகின்றனர். மேலும் இந்த மாஞ்சா கயிறு வாகனங்கள் செல்லக்கூடிய சாலைகளில் கண்ணுக்கே தெரியாமல் ஆங்காங்கே தொங்கிக் கொண்டே இருக்கின்றன.
ஒரு வாரமாக சற்று தளர்வு களுடன் ஊரடங்கு தொடர்ந்து கொண்டிருப்பதால். வேலை விஷயமாக தற்பொழுது பல மக்கள் இருசக்கர வாகனங்களில் தனது தேவைகளுக்காக சாலைகளில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஒருபுறம் கொரோனா தொற்று மக்களின் உயிரை பறித்துக் கொண்டிருக்கிறது.
கடந்த வருடம் மாஞ்சா நூலால் பாலக்கரை காவல் நினைத்துக் உட்பட்ட பகுதியில் ஒருவர் உயிரை பறித்தது .திருச்சி மாநகரில் இதுபோன்ற சம்பவம் இனி நடக்காமல் இருக்க காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பெற்றோர்களுக்கும் காவல்துறையினர் அறிவுறுத்தி அவரது பிள்ளைகளை மாஞ்சா நூல் தயாரிக்கும் பணியில் ஈடுபட விடாமல் தடுக்கவும் அறிவுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றனர்.இதுபோன்ற மாஞ்சா கயிற்றில் யாரும் சிக்கி உயிர் இறப்பதற்கு முன் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC
Comments