Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை: திருச்சி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கடந்த06.10.2021-ந்தேதி இரவு எ.புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜெ.ஜெ நகர் பகுதியில் குடும்ப பிரச்சனை காரணமாக தனது மனைவியை தாக்கியும், கேஸ் சிலிண்டர் மீது தள்ளி கொலை செய்ததாக பெறப்பட்ட தகவலின்பேரில் எதிரி கோபால் 37/26 த.பெ. முருகேசன் என்பவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் புலன் விசாரணை விரைந்து முடிக்கப்பட்டு, மேற்படி எதிரி மீது குற்றப்பத்திரிக்கையை புலன் விசாரணை அதிகாரி கடந்த 06.05.2022-ந்தேதி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள். இவ்வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி, திருச்சி அவர்களால் இன்று 02.02.2026-ந்தேதி மேற்படி வழக்கின் எதிரிக்கு இ.த.ச.பிரிவு 302-ன்படி ஆயுள் சிறைதண்டனை மற்றும் ரூ.1,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, நீதிமன்ற விசாரணைக்கு சாட்சிகளை குறித்த காலத்தில் ஆஜர்படுத்தியும், இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிக்கு தண்டனை பெற்றுத்தந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாரட்டினார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *