Site Logo mobile
Search Icon
Mobile Gif
Articles

உயிர் காக்கும் முதலுதவி – மாரடைப்பு ஏற்படுபவருக்கு செய்ய வேண்டிய குறித்த விளக்கம்!!

மருத்துவ ஆபத்தில் இருப்பவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரை உடனடியாக மேற்கொள்ளும் சிறு செயலும் முதலுதவி தான். விரைந்து கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டில் துரித உணவுகள், வேக பயணம், உடற்பயிற்சின்மை போன்ற பல காரணங்களால் மாரடைப்பில் ஆரம்பித்து, வாகன விபத்து, மூச்சு விடுதலில் சிரமம் என பல்வேறு உடல்நல குறைபாடுகள் எதிர்பாரா நேரத்தில் ஏற்படுகிறது.

இந்த மாதிரியான சூழ்நிலைகளில் முதலுதவி மேற்கொள்ளும் வகையில் பல பயிற்சி நிறுவனங்கள் மூலம் முதலுதவிகளுக்கு என தனியாக பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. எல்லாரும் முதலுதவி பயிற்சிகளை மேற்கொள்ள முடியாது என்றாலும் கண்டிப்பாக சில முதலுதவிகளை தெரிந்து வைத்திருத்தல் அவசியம். இது ஆபத்தில் இருக்கும் பலரை காப்பாற்றுவதற்கு உதவும் என கூறும் கொடும்பாலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மருத்துவர் ராகவி, மாரடைப்பு ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவி முறைகளை விளக்குகிறார்.

மாரடைப்பு CPR தற்போது பல்வேறு காரணங்களால் இளம்வயது மாரடைப்பு அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் சுயநினைவின்றி மயங்கி விழுகிறார் என்னும் பட்சத்தில் உடனடியாக ஆம்புலன்சிற்கு தகவல் கூறிவிட்டு, அவருக்கு சுவாசம் மற்றும் நாடித்துடிப்பு இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். மூச்சு விடுதலை கவனிக்க மூக்கின் மேல் கை வைத்தும், நாடித்துடிப்பை கழுத்தில் விரல்களை வைத்தும் கவனிக்க வேண்டும்.

இவையிரண்டும் இல்லை என்கிற பட்சத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இதயம் செயல்படுவது நின்றிக்கலாம், இந்த மாதிரியான சூழலில் ஆம்புலன்ஸ் வரும் வரை வெய்ட் செய்யாமல் உடனடியாக CPR என கூற கூடிய Cardiopulmonary resuscitation என்ற இதயத்தை செயல்படுத்தும் முதலுதவி செய்ய வேண்டும். 

எப்படி செய்ய வேண்டும்?

பாதிக்கப்பட்டவரின் நெஞ்சில் முதலுதவி செய்பவரின் உள்ளங்கையை வைத்து அதற்கு மேல் மற்றொரு உள்ளங்கையை வைத்து நெஞ்சுப்பகுதி நன்றாஅழுந்தும்படி 30 முறை இடைவிடாது அழுத்த வேண்டும், பின்னர் வாய் வழியாக இரண்டு முறை ஊதி சுவாசம் கொடுக்க வேண்டும், பின்பு மீண்டும் நெஞ்சுப்பகுதியை 30 முறை இடைவிடாது அழுத்தி இரண்டுமுறை வாயின் வழியே சுவாசம் கொடுக்க வேண்டும்.

இதே போல இரண்டு சுற்றுகள் செய்ய வேண்டும் பின்பு, நாடி துடிப்பு மீண்டிருக்கிறதா என்பதை செக் செய்து கொள்ளவும், இல்லையெனில் நாடிதுடிப்பு வரும் வரி மீண்டும் இந்த செயல்முறையை செய்யவும். மமுடிந்த அளவு விரைவாக சிறிது வேகமாக இந்த CPR செய்வது நல்லது.

மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நபர் சுயநினைவுடன் இருக்கிறார் எனில், அவருக்கு அதிகப்படியான அளவில் இடதுபுற நெஞ்சு பகுதியில் வலிய இருக்கும் கூடவே அந்த வலி இடதுபுற தோள்பட்டை, முதுகில் பரவ ஆரம்பிக்கும், பாதிக்கப்பட்ட நபர் படபடப்பாக, அதிக வியர்வை வெளியேறுவது போன்ற அறிகுறிகளுடன் காணப்படுவார், இந்த நேரத்தில் சிறிதும் தாமதிக்காமல் மருத்துவமனை அழைத்து செல்ல வேண்டும், அதற்குள் விரைவாக Aspirin 325 mg மாத்திரை ஒன்று, Clopidogrel 150 mg மாத்திரை இரண்டு, Atorvastatin 80 mg மாத்திரை ஒன்று(Tab.Aspirin 325mg – 1tablet, Tab.Clopidogrel 150mg -2 tablets, Tab.Atorvastatin 80mg- 1 tablet) என்ற அளவில் எடுத்து கொள்ள வேண்டும்.

மாத்திரைகள் கைவசம் இல்லாத பட்சத்தில் அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ, அரசு மருத்துவமனைகளிலோ இவை கிடைக்கும், உடனடியாக இவற்றை அங்கு சென்று பெற்று கொள்ளலாம். இந்த மாத்திரைகள் எந்த வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவற்றை எடுத்து கொள்ளுதல் சிறந்தது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *