தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி மாவட்டம், சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு வேளாண் சார்ந்த பயிற்சிகள், செயல்முறை விளக்கங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள், இயற்கை முறையில் பயிரிடுதல் புதிய ரகங்களில் பயிரிடுதல் தொழில்நுட்பங்களை முறையாக கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் 42 ஆயிரம் கோடி மதிப்பிலான விவசாய திட்டங்களை பிரதமர் மோடி சனிக்கிழமை அன்று டெல்லியில் இருந்து தொடங்கி வைத்தார்.
அதன் காணொளி காட்சி சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி.ராஜா பாபு அவர்கள் தலைமை தாங்கி பேசியதாவது, விவசாயிகளுக்கு வருமானத்தை இரு மடங்காக அதிகரிக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது.
திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள விவசாயிகள் ஆர்வத்துடன் முன்வர வேண்டும் மேலும் மத்திய அரசு மாநில அரசு திட்டங்களின் ஏதேனும் சந்தேகம் இருந்தால் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகி தங்களது சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம். மேலும் முன்னோர்கள் இயற்கை விவசாயம் மேற்கொண்டு நூறு வயது வரை வாழ்ந்தனர். நிலப்பரப்பும் அதிகமாக இருந்தது மக்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
பின்னர் மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க ரசாயன உரங்களை பயன்படுத்தி விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் இன்றைக்கு மனிதன் 60 வயது வரை வாழ்ந்தால் பெரிது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு இயற்கை விவசாயத்தின் பக்கம் பொதுமக்கள் திரும்பி உள்ளனர். இயற்கை விவசாய பொருட்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது ஒரு காலத்தில் கேழ்வரகு கூழ் வசதி இல்லாதவர்கள் சாப்பிடுவது என்ற நிலை இருந்தது ஆனால் இன்று பணம் படைத்தவர்களும் கம்மங்கூழ், கேழ்வரகு கூழ் சாப்பிடுகின்றனர். இயற்கை விவசாயத்தை பயன்படுத்தி வருமானத்தையும் வாழ்வாதாரத்தையும் வாழ்க்கை தரத்தையும் நாம் உயர்த்திக் கொள்ளலாம் என விவசாயிகளிடையே எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் இணை பேராசிரியர்கள் முனைவர் சகிலா முனைவர் ஜானகி முனைவர் மாரிமுத்து மற்றும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் மண்புழு உரம் இலவசமாக வழங்கப்பட்டது. மேற்கண்ட தகவலை சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி.ராஜா பாபு அவர்கள் தெரிவிக்கின்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments