டிச2 நடக்கவிருக்கும் lok adalat சிறப்பாக நடத்துவது குறித்து சிறப்பு கூட்டம் நேற்று மாவட்ட நீதிபதி M.கிறிஸ்டப்பர் தலைமையில் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் 13.12.2025 அன்று நடக்கவிருக்கும் lok adalat பற்றியும் மேலும் தற்போது 01.12.2025
நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கும் e- filing இல் நடைமுறை சிரமங்கள் குறித்தும் தங்களது கருத்துக்களை கூறினார்கள்.
நிகழ்ச்சியில் நீதிபதிகள் சுவாமிநாதன், கோபிநாத், சரவணன்,
கார்த்திகா, ஸ்வர்ணம் J. ராஜகோபால், வெங்கடேசன், சண்முகப்பிரியா, நஸீர் அலி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மாவட்ட சட்டப் பணி ஆணை குழு செயலாளர் நீதிபதி பிரபு மற்றும் சார்பு நீதிபதிகள் அரசு வழக்கறிஞர் சவரிமுத்து
திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் கணேசன், முத்துமாரி, வடிவேல் சாமி குற்றவியல் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் முல்லை சுரேஷ், சசிகுமார், விஜய் நாகராஜன் செயலாளர் P.V. வெங்கட் மற்றும் 300க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments