எல்பிஜி சிலிண்டர் டெலிவரி செய்பவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
இருபது ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்துவரும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,சிலிண்டரை சுமந்து செல்லும் வாகனங்கள் மற்றும் வாகன பராமரிப்புச் செலவு ஆகியவற்றை எண்ணெய் நிறுவனங்கள் வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு வைப்புநிதி, மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளிட்டவை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரி மேன்ஸ் தொழிற்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.