Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் எல்பிஜி கேஸ் பங்க் மூடல் – ஆட்டோ இயங்க முடியாத நிலை

திருச்சி மாநகரில் உள்ள பெரும்பாலான ஆட்டோ ஓட்டுநர்கள், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஒப்பிடுகையில் எல்பிஜி கேஸ் சிக்கனமாக இருப்பதால் அதையே முதன்மையாகப் பயன்படுத்தி வருகின்றனர். பள்ளிச் செல்லும் குழந்தைகள் மற்றும் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களை உரிய நேரத்தில் கொண்டு சேர்ப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாநகரில் ஆட்டோகளுக்கு நிரப்பப்படும் எல்பிஜி கேஸ் பங்க் மூடப்பட்டு விட்டது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள ஆட்டோ எல்பிஜி கேஸ் நாள் ஒன்றுக்கு 12 டன் வரை நிரப்பி வேண்டிய நிலை ஏற்பட்டது அவர்களுக்கு கேஸ் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால்  எல்பிஜி பயன்படுத்தும் வாகனங்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளன. திருச்சி மாநகரில் இவர்களுக்கு நான்கு பங்க் உள்ளது 3 தற்பொழுது மூடப்பட்டு விட்டது.

திருச்சியில் ஆட்டோகளுக்கு நிரப்பப்படும் எல்பிஜி கேஸ் பங்க் நான்கும் கேஸ் இல்லாததால் மூடப்பட்டு விட்டது.

திருச்சி மாநகரில் நான்கு எல்பிஜி கேஸ் பங்குகளிலும் கேஸ் விநியோகம் இல்லாததால் பங்குகளில் ஆட்டோக்கள் கூட்டம் வரிசை கட்டி நிற்கிறது. ஒரே ஒரு பங்க் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே இருந்ததால் ஆட்டோக்கள் ஏராளமான வந்து கொண்டே இருக்கின்றன. ஆட்டோக்கள் மட்டுமல்லாது எல்பிஜி நிரப்பி ஓட்டும் கார்களும் பெறும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளன. ஆட்டோ ஓட்டுநர்கள் நாங்கள் கடன் வாங்கி கேஸ் இன்று நிரப்பி சவாரியை மேற்கொள்ளலாம். ஆனால் நாளை எங்களால் ஆட்டோவை ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விட்டது. குறிப்பாக தற்போது 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் சூழலில், மாணவர்களை அழைத்துச் செல்ல வாகனங்களை இயக்க முடியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.

ஏற்கனவே வீடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் உள்ள நிலையில், தற்போது தொழிலுக்கும் கேஸ் கிடைக்காதது தங்களை நிலைகுலைய வைத்துள்ளதாக ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
​”ஏற்கனவே வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்று தெரியவில்லை. வீட்டிலும் கேஸ் இல்லை, தொழிலுக்கும் வழியில்லை. அரசு உடனடியாக இதற்குத் தீர்வு காண வேண்டும்,” எனப் பாதிக்கப்பட்ட ஓட்டுநர்கள் தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *