மாசி மாதம் 19ஆம் தேதி (03.03.2026) செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள சந்திர கிரஹணத்தை முன்னிட்டு, பூஜை மற்றும் கோவில் சேவை நேரங்களில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பிற்பகல் 3:00 மணிக்கு ஸ்ரீ நம்பெருமாள் மூலஸ்தானத்தில் புறப்பாடு தொடங்கி, 3:30 மணிக்கு சந்தன மண்டப சேவைகள் நடைபெறும்.
தொடர்ந்து மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை திருமஞ்சனம் கண்டருளல் (கிரஹண காலத்தில்) நடைபெறுகிறது. மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை அலங்காரம் அமுது செய்யப்படும்.
இரவு 7:00 மணிக்கு மேற்படி மண்டபத்தில் புறப்பாடு நடைபெற்று, 7:30 மணிக்கு மூலஸ்தானம் சேருதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விசேஷ சேவை நேரம் காலை 6:00 மணி முதல் 7:15 மணி வரை நடைபெறும். பூஜா காலம் (சேவை இல்லை) காலை 7:15 மணி முதல் 9:15 மணி வரை. அதன் பின்னர் சேவை நேரம் காலை 9:15 மணி முதல் பகல் 1:00 மணி வரை நடைபெறும்.
சந்திர கிரஹணத்தை முன்னிட்டு பகல் 1:00 மணிக்கு மேல் மூலஸ்தானத்தில் சேவை இல்லை என்றும்,
உபசன்னதிகளிலும் பகல் 1:00 மணிக்கு மேல் சேவை நடைபெறாது என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments