திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் – துறையூர் சாலையில் பிரகாஷ் என்ற இளைஞர் தனது மாற்றம் செய்யப்பட்ட டிவிஎஸ் 50 இருசக்கர வாகனத்தில் படுத்தவாறு ஒட்டி சாகச பயணத்தில் ஈடுபட்டதுடன் அதை பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

தற்பொழுது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. பதைப்பதைக்க வைக்கும் இந்த வீடியோ காட்சியை கண்ட பலரும் அதிர்ந்துள்ளனர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டு லைக்குகளை அள்ளிக் குவிக்க தனது உயிரை பணயம் வைத்து சாகசத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

சாலையில் இவர் சாகசம் செய்யும்போது எதிரே மிக அதிவேகத்தில் பேருந்து கார்கள் வருவதை காட்சியில் காண முடிகிறது. ஏன் இவ்வளவு இவர் ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பது இந்த காட்சியை பார்ப்பவர்களின் கேள்வியாக உள்ளது. இளைஞர்கள் இனி இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என காவல்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து காவல்துறை நடத்திய விசாரணையில் இந்த சாகத்தில் ஈடுபட்ட நபர் முசிறி தாலுகா புலிவலம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சிங்காரம் மகன் நிவாஸ் (19) என்பது தெரியவந்தது. விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட இந்த இளைஞர் மீது புலிவலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           126
126                           
 
 
 
 
 
 
 
 

 08 June, 2024
 08 June, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments