மு.க.ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழா திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக, அரிமா 72 என்ற தலைப்பில் நிகழ்வுகள் நடந்து வருகிறது அதன் தொடர்ச்சியாக, திருச்சி தெற்கு மாவட்டம், மாநகர தி.மு.க சார்பாக, மாபெரும் கருத்தரங்கம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.
வரவேற்புரை மாநகர அவைதலைவர் நூர்கான்,தலைமை மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன், கருத்தரங்கத்தை துவக்கி வைத்து சிறப்புரை தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் – தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் –
அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கருத்தரங்கத்தில் பட்டிமன்ற புகழ் பேச்சாளர்கள் திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகர், புலவர் சண்முகவடிவேல், செல்வி. சமிதா பாண்டியன், ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்கள்,
நன்றியுரை மாநகர துணைச் செயலாளர் ஆறு.சந்திரமோகன்.இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேகரன், சபியுல்லா, கவிஞர் சல்மா, செந்தில்,துணை மேயர் திவ்யா,
பகுதி கழகச் செயலாளர் மோகன் மற்றும் மாவட்ட மாநகரக் கழக நிர்வாகிகள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அணிகளின் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments