திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் ஊராட்சியை சேர்ந்த செல்வராஜ் – புனிதா தம்பதியின் மகன் கிருபன்ராஜ் (27). இவருக்கு கிரிஜா உட்பட இரு தங்கைகள் உள்ளனர். கிருபன்ராஜ் காஞ்சிபுரத்தில் நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பாதுகாப்பு உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி ராபின்சாமேரி மற்றும் ரிஜோஸ் இனியா என்ற 6 மாத கைக்குழந்தையும் உள்ளனர். கடந்த 6 மாதத்துக்கு முன் கிருபன்ராஜ் தங்கை கிரிஜாவுக்கு பெரியவர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் அதே பகுதியை சேர்ந்த கவியரசன் கிருபன்ராஜ் தங்கை கிரிஜாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இதனால் இருவருக்குமிடையே பகை எற்பட்டது. இந்நிலையில் விடுமுறைக்காக கிருபன்ராஜ் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று குளித்து விட்டு வீட்டுக்கு செல்லும் போது வழியில் மறித்த கவியரசன் தகராறு செய்துள்ளார். அப்போது தான் மறைத்து வைத்திருநத கத்தியால் கிருபன்ராஜ் தொடை பகுதியில் குத்தியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்த கிருபன்ராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்து மருத்துவர்கள் முதலுதவி செய்த போது உயிரிழந்தார்.

கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய கவியரசன், மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது தம்பி கலைவாணன் மற்றும் நிவாஸ் ஆகிய மூவரையும் லால்குடி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF






Comments