கொரோனா நோய் பற்றிய பயமும், அச்சமும் தயக்கங்களும் பல்வேறு சந்தேகங்களும் நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்து கொண்டு இருக்கிறது. இதற்கிடையில் கடந்த சில நாட்களாக கொரானா வைரஸ் நோய் தொற்று உடையவர்கள் நோய் தொற்று ஏற்பட்ட உடன் சிடி ஸ்கேன் எடுப்பது அதிகப்படுத்தியுள்ளது. மக்களிடையே பெரும் பயத்தையும் உள்ளாக்கியுள்ளது. இது குறித்து தெளிவாக மக்களுக்கான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று திருச்சி மேக்னம் இமேஜிங் & டயக்னோஸ்டிக்ஸ் கதிரியக்க மருத்துவர் பவஹரன் மக்களுக்கான பல்வேறு கேள்விகளுக்கு உரிய விளக்கங்களை அளித்துள்ளார்.

கொரானாவிற்கு அறிகுறிகள் தொடங்கிய 5 முதல் 7 நாட்களுக்குள் CT scan எடுக்கலாம் அல்லது நோயாளர் இரத்தத்தின் அளவை 95 சதவீதம் அல்லது 95 விட குறைவாக இருந்தால் மட்டுமே சிடி ஸ்கேன் தேவைப்படுகிறது. Chest x-ray என்பது இரு பரிமாணம் பிம்பங்களை தரும் சிடி என்பது சுற்றுச்சூழலும் x-ray டியூப் மூலம் எடுப்பதால் முப்பரிமாண தெளிவான நுண்ணிய பிம்பங்களையும் எடுக்கலாம். இன்றைய நவீன உபகரணங்களுடன் எடுக்கப்படுகிறது. அது மிக உயர்ந்த உயரத்தில் போயிங் விமானத்தில் 10 மணி நேர பயணத்தில் ஏற்படும் கதிரியக்க பாதிப்பு இருக்கும்.

ஒரு வருடம் இந்த பூமியின் நீங்கள் நேரிடும் கதிரியக்க அளவிற்கு ஒப்பானது. எனவே அதீத பயம் தேவைப்படுவதில்லை. காய்ச்சல் ஏற்பட்டு ஐந்து நாட்களுக்கு பிறகு மூச்சு விடுதலில் குறைபாடு இல்லை எனில் சிடி ஸ்கேன் எடுக்க அவசியமில்லை. மூச்சு விடுதலில் சிரமம் இல்லாத வரை தேவைப்படுவதில்லை தொற்றாளருடனான கடைசி சந்திப்பில் இருந்து ஒரு வாரத்திற்கு பிறகு RTPCR செய்ய வேண்டும் இல்லை அறிகுறிகள் தென்பட்டால் முன்னரே கூட RTPCR செய்யலாம் நிச்சயமாக ஆர்டிபிசியல் நெகட்டிவ் ஆனாலும் நோய் அறிகுறிகள் நோய் அறிகுறிகளும் ரத்தப் பரிசோதனைகளும் வைரஸ் தொற்று போல இருக்கின்றன சிடி ஸ்கேன் அவசியமாகிறது.

CTSS என்பது நோயின் தீவிரம், நுரையீரல் பாதிப்பை தெரிவிக்கும் விதமாக கணக்கிடுவார்கள் 40 அல்லது 25 நாற்பதுக்கு கணக்கிட்டால் 15 கீழ் இருந்தால் சிறிய பாதிப்பையும் 19 முதல் 20 வரை ஓரளவு தீவிர பாதிப்பையும் அதற்கு மேல் அதிதீவிர பாதிப்பையும் குறிக்கும் 25ற்க்கு என கணக்கிட்டால் சிறிய பாதிப்பையும் 9 முதல் 15 வரை ஓரளவு தீவிர 15 அதிதீவிர பாதிப்பையும் குறிக்கும். எல்லா கோவிட் நோயாளிகளுக்கும் சிடி ஸ்கேன் தேவைப்படுவதில்லை கிட்டத்தட்ட 7 முதல் 10 சதவீத நோயாளர்களுக்கு மட்டுமே இன்றைக்கு தேவைப்படுவதாக உள்ளது.

இன்றைக்கு வழக்கமான அறுவை சிகிச்சைகளுக்கு கூட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுக்க செல்வதற்கு முன் CT SCAN எடுக்க முக்கிய காரணம். உலகளாவிய நோய் தொற்று காலமாக இருப்பதாலும் மற்றும் வெறும் வயிற்றில் வலி என மற்ற அறிகுறிகள் தொற்று ஏற்படுவதால் ஸ்கேன் அவசியமாகின்றது. அறுவை சிகிச்சைக்கான மயக்க மருத்துவ முறை குறித்தும் முடிவு செய்யுவும் ஸ்கேன் எடுப்பது அவசியமாகிறது. அதே போன்று CORADS என்பது RTPCR இல்லாமல் சிடி ஸ்கேன் எடுக்க பெறும் நோயாளிகளுக்கு நோய் தொற்றுவதற்கான வாய்ப்பு மதிப்பீடு ஆகும். பொதுவாக 1-5 வழங்கப்படும், 1-2 கொரானாவிற்கு வாய்ப்பு இல்லை, 3 சந்தேகத்திற்கு உரியதாக இருக்கிறது. 4-5 கொரானா இருப்பதற்கான அதிக வாய்புகள் என்பதையும் காட்டுகின்றன.

நுரையீரல் பாதிப்பு அறிய CTSS உதவும். பொதுவாகவே இன்றைக்கு அதிகமாக தொற்று பாதிக்கப்பட்டு நுரையீரல் பாதிப்பால் இறப்பவர்கள் எண்ணிக்கை பார்க்கும் பொழுது அவர்கள் அதிக அளவில் புகை பழக்கத்திற்கு ஆளானவர்களாக இருக்கின்றார்கள். அவ்வாறு இருப்பவர்கள் இந்த பாதிப்பில் இருந்து மீள இயலாமலே மூச்சுத்திணறல் போன்ற நோய் ஏற்பட்டு இருப்பதற்கான சதவீதமும் அதிகரிக்கின்றது என்கிறார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK
 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           21
21                           
 
 
 
 
 
 
 
 

 22 May, 2021
 22 May, 2021





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments