மார்கழி மாத பெளர்ணமியை முன்னிட்டு காவிரி படித்துறையில் தீபம் ஏற்றி, காவிரி தாய்க்கு ஆரத்திஎடுத்து வழிபாடு – சிவனடியார்கள், சித்தர்பெருமக்கள் பங்கேற்பு

மார்கழி மாத பௌர்ணமியை முன்னிட்டு, மார்கழி திருவாதிரை நட்சத்திரமான நேற்று அனைத்து சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசனம் நிகழ்வு நடைபெறும் இந்நாளில், உலக சித்தர்கள் சர்வசமய கூட்டமைப்பு மற்றும் சிவனடியார்கள் சார்பில்
திருச்சி அம்மாமண்டபம் காவிரி படித்துறையில் பூமியை வளம்கொழிக்கவைத்து, மக்களை வாழவைக்கும் காவிரி தாயை வணங்கி ஆரத்தி வைபவம் நடைபெற்றது.

சிவனடியார்கள், சித்தர் பெருமக்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அம்மாமண்டபம் காவிரி ஆற்றின் படித்துறையில் சிவபுராணம், பஞ்சபுராணம் பாடியும், நீரைப்போற்றும் பதிகம்பாடி வழிபாடுசெய்ததுடன், காவிரிதாய்க்கு ஆரத்திஎடுத்து, காவிரி அன்னைக்கு மலர்தூவியும், மஞ்சள், தேன், கல்கண்டு மற்றும் பால் போன்றவற்றை ஆற்றிலிட்டு அனைவரும் காவிரித்தாயை வழிபாடுசெய்தனர். மேலும் சுமங்கலி பெண்களுக்கு மங்கல பொருட்கள் வழங்கியும் வழிபட்டனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments