கலைகளுக்கு பிறப்பிடமாகவும் ஆன்மீகத்தின் உறைவிடமாகவும் விளங்குகின்ற நகரம் திருச்சிராப்பள்ளி. 274 சைவத்தலங்களுக்குள் ஈடு இணையற்றதாகவும் தென் கைலாயம் என்று அழைக்கப்படும் சிறப்பினையும் கொண்ட கலைக்கு கருவூலமாக திகழ்வது மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோவில்.

கோவிலில் திருவிழாவானது(01/05/2025) நாளை கொடியேற்றத்துடன் தொடங்கி (09/05/2025) வெள்ளிக்கிழமை திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெற உள்ளது.இரண்டாம் நாள் கற்பக விருட்ச வாகனத்திலும் அம்பாள் கிளி வாகனத்திலும் மூன்றாம் நாள் சுவாமி பூத வாகனத்திலும் அம்பாள் வாகனத்திலும் நான்காம் நாள் கைலாச பார்வதி சுவாமி

கைலாச பர்வதம் வாகனத்திலும் அம்பாள் அன்னம் வாகனத்திலும் ஐந்தாம் நாள் சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்திலும் அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும் ஆறாம் நாள் சுவாமி யானை வாகனத்திலும் அம்பாள் பல்லாக்கு வாகனத்திலும் ஏழாம் நாள் நந்தி சுவாமி நந்தி வாகனத்திலும் அம்பாள் யாழி வாகனத்திலும் எட்டாம் நாள் தங்கள்

குதிரை வாகனத்திலும் சுவாமி தங்க குதிரை வாகனத்திலும் அம்பாள் பழக்கிலும் திருவீதி உலா நடைபெறும் ஒன்பதாம் நாள் சித்திரை 26 ஆம் தேதி (9 /05 /2025)வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் திருத்தேர் வடம்

பிடிக்கும் பத்தாம் நாள் சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்திலும் அம்பாள் வெளிரெசப வாகனத்திலும் 11 ஆம் நாள் தங்கக் குதிரை வாகனத்திலும் அம்பாள் பல்லக்கிலும் எழுந்தருள உள்ளனர் சித்திரை 31 (14/05/2025) இரவு சண்டிகேஸ்வரர் திருவிதி உலா உடன் தேர் திருவிழா நிறைவடையும் என்று கோயில் நிர்வாகத்தால் அறிவித்துள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF



Comments