பிரசித்திபெற்ற திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி மட்டுவார்குழலம்மை அம்பாள் திருக்கல்யாண வைபவம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.திருச்சிக்கு பெருமை சேர்ப்பதும், தென்கயிலாயம் எனப்புகழ்பெற்றதுமான மலைக்கோட்டை தாயுமானவர்சுவாமி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் சித்திரை தேர்திருவிழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும்,
அதன்படி கடந்த 1ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரைத் திருவிழாவின் ஆறாம் நாளான இன்று திருக்கல்யாண வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.நூற்றுக்கால் மண்டபத்தில் தாயுமானவர்சுவாமி, மட்டுவார்குழலி அம்மையாருடன் எழுந்தருளினார். சிறப்பு யாகங்களைத் தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க, நாதஸ்வரம் இசைக்க தாயுமானவர், மட்டுவார்குழலம்மை திருக்கல்யாண வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
திருமண வைபவம் கைகூடவும், மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும் இத்திருக்கல்யாணம் சிறப்பு வாய்ந்ததால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு வைபத்தைக்கண்டு, தாயுமானசுவாமி உடனுறை மட்டுவார்குழலம்மையாரை வலம்வந்து வழிபட்டுச் சென்றனர்.
தருமபுரம் மாசிலாமணி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.முக்கிய திருவிழாவான மலைக்கோட்டை தாயுமானசுவாமி தேரோட்டம் 9ம் தேதி காலை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments