இந்தியத் திரையுலகின் கானக்கலைவாணி திரையிசைப் பாடகி மறைந்த வாணிஜெயராமுக்கு கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரி சார்பில் செயலர் அருள்பணி.லூயிஸ் பிரிட்டோ தலைமையில் கலையஞ்சலி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
கல்லூரியின் முதல்வர் முனைவர் ப. நடராஜன் அவர்கள் வாணிஜெயராம் பாடல், இசைப்புலமை, கலைக் காவிரியுடன் இணைந்து அவர் பாடிய பக்திப் பாடல்கள், கல்லூரியின் நடனத்துறைக்காக அவர் பாடிய பாடல் அனுபவங்கள், உள்ளிட்ட இந்திய மொழிகளில் அவருக்குரிய தனித்துவமான ஆற்றல், இசையின் வகைமைகளை கையாண்ட விதம் ஆகிய அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பேராசிரியர்கள் மாணவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn






Comments